Archives: ஜூலை 2023

ஆவியில் நிரம்பி

அமெரிக்க நாட்டு எழுத்தாளரும், புதிய ஏற்பாட்டு அறிஞருமான ஸ்காட் மெக்நைட; உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது, "ஆவியில் நிரம்பிய அனுபவத்தைப் பற்றி" பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு முகாமில் இருந்தபோது, ஆவியானவருக்கு  ஒப்புவிப்பதன் மூலம் கிறிஸ்துவை வாழ்க்கையின் சிம்மாசனத்தில் அமர்த்த அதின் பேச்சாளர் அவருக்கு அழைப்பு விடுத்தார். பின்னர், அவ்வறிஞர் மரத்தடியில் அமர்ந்து, "பிதாவே, என் பாவங்களை மன்னியும்.  பரிசுத்த ஆவியானவரே, என்னுள்ளே வந்து என்னை நிரப்பும்" என்று ஜெபித்தார். ஒரு பெரிய வல்லமையான மாற்றம் ஏற்பட்டது. “அந்த தருணத்திலிருந்து என் வாழ்க்கை முற்றிலும் வேறுபட்டதாய் மாறியது. பூரணம் அல்ல ஆனால் மற்றம் உண்டானது” என்றார். வேதத்தைப் படிக்கவும், ஜெபிக்கவும், இயேசுவில் உள்ள மற்ற விசுவாசிகளைச் சந்திக்கவும், தேவனுக்கு ஊழியம் செய்யவும் அவருக்கு உடனே விருப்பம்  ஏற்பட்டது.

 

உயிர்த்தெழுந்த இயேசு பரலோகத்திற்குச் செல்வதற்கு முன், தனது நண்பர்களிடம், ”ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்” (அப்போஸ்தலர் 1:5) என்று கட்டளையிட்டார். அவர்கள் பெலனடைந்து, ”எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், சாட்சிகளாயிருப்பீர்கள் (அப்போஸ்தலர் 1:8). இயேசுவை நம்பும் ஒவ்வொருவருக்கும் தேவன் பரிசுத்த ஆவியைத் தருகிறார். இது பெந்தெகொஸ்தே நாளில் முதலில் நடந்தது (அப்போஸ்தலர் 2ஐப் பார்க்கவும்). இன்றும் யாரெல்லாம் கிறிஸ்துவை நம்புகிறார்களோ அவர்களுடைய வாழ்விலும் இது நிகழ்கிறது.

 

இயேசுவை விசுவாசிக்கிறவர்களை தேவனுடைய ஆவியானவர் தொடர்ந்து தம் ஆவியால் நிரப்புகிறார். ஆவியானவரின் உதவியால் சுபாவ மாற்றங்கள் மற்றும் உன்னதமான விருப்பங்கள் போன்ற கனிகளை தருகிறோம் (கலாத்தியர் 5:22-23). தேவன் நமக்கருளும் ஆறுதலுக்கு, உணர்த்துதலுக்கு, உதவிக்கு மற்றும் அன்பிற்காக நன்றியோடு துதிப்போம்.

அமைதிக்கான அறை

நீங்கள் அமெரிக்காவில் அமைதியான இடத்தைத் தேடுகிறவர்களென்றால், மினியாபோலிஸ், மினசோட்டாவில் நீங்கள் விரும்பும் அந்த அறை உள்ளது. இவ்வறையானது அனைத்து ஒலிகளிலும் 99.99 சதவீதத்தை உறிஞ்சிக்கொள்கிறது! ஆர்ஃபீல்ட் ஆய்வகங்களின் உலகப் புகழ்பெற்ற எதிரொலியற்ற அந்த அறை "பூமியின் அமைதியான இடம்" என்று அழைக்கப்படுகிறது. இந்த சத்தமில்லாத இடத்தை அனுபவிக்க விரும்புபவர்கள், கவனம் சிதறாத வண்ணம் உட்கார்ந்து கொள்ள வேண்டும். மேலும் நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு மேல் யாரும் அந்த அறையில் இருக்க முடியாது.

 

இத்தகைய மௌனத்தை பெரும்பாலும் நாம் விரும்ப மாட்டோம். ஆயினும்கூட, இரைச்சலும் அவசரமும் நிறைந்த இந்த உலகில் சிறிது அமைதிக்காக நாம் அனைவரும் சில சமயங்களில் ஏங்குகிறோம். நாம் பார்க்கும் செய்திகளும், நாம் உள்வாங்கும் சமூக ஊடகங்களும் கூட, நம் கவனத்தை சிதறடிக்கும் ஒருவித ஆரவாரமான "இரைச்சலை" நமக்குள் கொண்டு வருகின்றன. எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டும் வார்த்தைகள் மற்றும் படங்கள் நம் மனதில் பதிந்து விடுகின்றன. அவற்றில் நாம் மூழ்கி விட்டால் தேவனின் சத்தத்தைக் கேட்க முடியாமல் போய்விடும்.

 

எலியா தீர்க்கதரிசி ஓரேப் பர்வதத்தில் தேவனைச் சந்திக்கச் சென்றபோது, பலத்த, சடுதியான காற்றிலோ, பூகம்பத்திலோ அல்லது நெருப்பிலோ அவரைக் காணவில்லை (1 இராஜாக்கள் 19:11-12). எலியா ஒரு "மெல்லிய சத்தத்தைக்" கேட்கும் வரை, அவர் முகத்தை மூடிக்கொண்டு, "சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை" (வவ. 12-14) சந்திப்பதற்காக குகையை விட்டு வெளியேறினார்.

 

உங்கள் ஆவியும்கூட அமைதலுக்காக ஏங்கலாம், ஆனால் அதைக்காட்டிலும் தேவனின் சத்தத்தை கேட்கவே அது வாஞ்சிக்கிறது. உங்கள் வாழ்க்கையில் அமைதிக்கான ஒரு நேரத்தை ஒதுக்குங்கள். அப்பொழுது தேவனின் 'மெல்லிய சத்தத்தை' உங்களால் கேட்க முடியும் (வச. 12).

தாழ்மையை தரித்தல்

“ஃப்ரோசன் ட்ரீட்” நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி “அண்டர்கவர் பாஸ்” என்ற தொலைக்காட்சித் தொடரில், காசாளர் சீருடை அணிந்தவராக நடித்தார். அவரது செயற்கை முடியும், ஒப்பனையும் அவரின் உண்மையான அடையாளத்தை மறைத்து, ஒரு புதிய பணியாளரைப் போல் தோற்றம் தரவே, தனது நிறுவனத்தின் அங்காடிகளில் ஒன்றில் பணியாற்றினார். தனது நிறுவனத்தில் விஷயங்கள் உண்மையில் எவ்வாறு நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காகவே அவர் அவ்வாறு மாறுவேடத்தில் சென்றார்.  மேலும் அதன் மூலம் அங்காடி எதிர்கொள்ளும் சில சிக்கல்களை அவரால் தீர்க்க முடிந்தது.

 

நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்க இயேசு ஒரு "தாழ்மையான நிலையை" (பிலிப்பியர் 2:7) எடுத்தார். அவர் மனிதனாகி பூமியில் இருந்து, தேவனைப் பற்றி நமக்குக் கற்பித்தார், இறுதியில் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் (வச. 8). இந்தப் பலி கிறிஸ்துவின் மனத்தாழ்மையை வெளிப்படுத்தியது. அவர் கீழ்ப்படிதலுடன் தம் ஜீவனை நமது பாவநிவாரன பலியாக கொடுத்தார். அவர் பூமியில் ஒரு மனிதனாக இருந்து, நாம் அனுபவிக்கும் அனைத்தையும் அவரும் அனுபவித்தார்.

 

இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம், நம் இரட்சகரைப் போலவே "அதே மனப்பான்மையுடன்" இருக்க அழைக்கப்படுகிறோம். குறிப்பாக மற்ற விசுவாசிகளுடனான நமது உறவுகளில் (வ.5) மனத்தாழ்மையை அணிந்துகொள்ள தேவன் நமக்கு உதவுவார் (வ.3). கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டவர்களாயிருந்து (வ.5) மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாராக இருக்கும் ஊழியர்களாக வாழ அவர் நம்மை அழைக்கிறார். அவர்களை நேசிக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண செய்யவும், தேவன் நம்மை சிறந்த நிலையில் பயன்படுத்துவார்.

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

தேவனோடு ஆழமான உறவை வளர்ப்பது எப்படி!

நாம் தனிமையில் இருக்கும்போது நமது பாரங்களைப் பகிர்ந்துகொள்ளவும் அல்லது ஆறுதல்படுத்தப்படவும் யாரேனும் ஒருவர் நம் இதயத்தில் உள்ளதை இயேசுவிடம் சொல்வதை விரும்புகின்றோம். ஆனால் நாம் எப்படி இயேசுவின் நண்பர்களாக இருக்கிறோம் என்பதைப் பற்றி எத்தனை முறை நினைக்கின்றோம்? அவரிடமிருந்து பெற்றுக்கொள்வது என்ற மேலோட்டமான உறவைத் தாண்டி அவருடன் அந்த ஆழமான நெருக்கத்தை வளர்த்துக்கொள்வது எப்படி?

எல்லா சூழ்நிலைகளிலும், கைகளைத்தட்ட இரண்டு கைகள் தேவை. தேவனை ஒர் பரிபூரணமான, நிலையான நண்பராக எண்ணி நாம் வளரும்போது, அவருடன் இன்னும் ஆழமாக வளர்வது…

பாவ அறிக்கை

“அதை மறைக்க கூடாது” என வின்ஸ்டனுக்குத் தெரியும். எனவே அவன் ஒரு தந்திரமான யுக்தியைக் கையாண்டான்.  "தந்திரமாக மறைப்பது" என்று அதைப் பற்றிக் கூறுவோம். வின்ஸ்டன் தூக்கி எறியப்பட்ட, கவனிக்கப்படாத காலணிகளை கண்டால், சாதாரணமாக அந்தத் திசையில் வளைந்து, அதை எடுத்துவிட்டு, யாரும் பார்க்காத நேரத்தில், மெதுவாக நடந்து செல்வான். கதவைத் தாண்டும்வரை தன்னை எவரும் பார்க்கவில்லை என்று அறிந்துகொண்டால், வின்ஸ்டன் உங்கள் காலணிகளை எடுத்துக்கொண்டு மெதுவாக செல்கிறான் என்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

 

 சில சமயங்களில் "தேவன் நம் கடந்தகால பாவத்தை கண்டுகொள்ள மாட்டார்" என நாமும் தந்திரமாக நடக்கிறோம் என்பது தெளிவான ஒன்று. அவர் கவனிக்கமாட்டார் என்ற நினைவில் நாம் வஞ்சிக்கப்படுகிறோம். இது பெரிய விஷயமில்லை, "அது" எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று நம்மை நாமே பகுத்தறிகிறோம். ஆனால், வின்ஸ்டனைப் போன்றதான இந்நடவடிக்கைகள் தேவனைப் பிரியப்படுத்தாது என்பதை நாம் நன்கு அறிவோம்.

 

தோட்டத்தில் ஆதாம் மற்றும் ஏவாளைப் போல, நம் பாவத்தின் அவமானத்தின் காரணமாக நாம் அப்பாவங்களை மறைக்க முயற்சிக்கலாம் (ஆதியாகமம் 3:10) அல்லது எதுவுமே நடக்காதது போல் நடிக்கலாம். ஆனால் வேதாகமம் மிகவும் வித்தியாசமான ஒன்றைச் செய்ய நம்மை அழைக்கிறது: தேவனின் இரக்கத்திற்காகவும் மன்னிப்பிற்காகவும் அவரிடம் ஓட சொல்கிறது. நீதிமொழிகள் 28:13 நமக்குச் சொல்லுகிறது: “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” என்று

 

நம் பாவத்தை யாரும் கவனிக்கவில்லையென்று, அதை நாம் செய்யாதது போல் தந்திரமாக நடக்க முயற்சிக்க வேண்டியதில்லை. நம் தவறுகளைப்

பற்றிய உண்மையை நம்பகமான நண்பரான தேவனிடம் சொல்லும்போது, இரகசியப் பாவச்சுமையிலிருந்தும், குற்ற உணர்ச்சியிலிருந்தும், அவமானத்திலிருந்தும் விடுதலை பெறுவோம் (1 யோவான் 1:9).